News September 29, 2025

ராம்நாடு: இனிமே முழு கண்காணிப்பில்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்சாட்டுகளை தடுக்கும் விதமாக SAFE RAMAND திட்டத்தின் கீழ் பரமக்குடி தாலுகா பெங்களூர் பகுதியில் 5 சிசிடிவி கேமராவும், அரியேனந்தல் பகுதியில் 4 சிசிடிவி கேமராவும், உரப்புளி பகுதியில் 2 சிசிடிவி கேமராவும், கமுதி செங்கப்படை பகுதியில் 3 சிசிடிவி கேமரா என மாவட்ட முழுவதும் மொத்தம் 3128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 29, 2025

ராம்நாடு: சாலை விபத்தில் பெண் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் மறவர் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் முருகன் அவரது மனைவி ஸ்ரீதேவி, டூவீலரில் மதுரை சென்று விட்டு ஊர் திரும்பிய வழியில், அருப்புக்கோட்டை அருகே நேற்றிரவு (28/9/25) பரளச்சி சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரளச்சி காவல்துறை அதிகாரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News September 29, 2025

ராம்நாடு: பத்திரபதிவு கட்டணம் LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக் செய்து <<>>மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News September 29, 2025

ராம்நாடு: கட்டடத் தொழிலாளி அடித்து கொலை

image

ராம்நாடு, பசும்பொன் நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் (38) கட்டட வேலை செய்து வருகிறார். அவரது நண்பரான பரமக்குடி மஞ்சள் பட்டணத்தை சேர்ந்த தினேஷ் பாண்டியன் என்பவரின் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு ஐந்துக்கும் மேற்பட்டோர் முத்துராமலிங்கத்தை வீட்டில் அடித்து கொலை செய்துள்ளனர். கொலை குறித்து எமனேஸ்வரம் போலீசார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!