News October 11, 2025
ராம்நாடு: ஆன்லைன் மோசடி – ரூ.51,000 மீட்பு

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர் இணையத்தின் மூலம் ரூ.51,000 பணத்தை இழந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் விரைவான விசாரணை மேற்கொண்டு, இழந்த ரூ.51,000 பணத்தையும் மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை இன்று (அக்.10) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்கள்.
Similar News
News October 11, 2025
இராம்நாடு மாணவர்கள் உதவித்தொகை திட்டம் APPLY NOW

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்
செயல்படுத்தப்படவுள்ளது. 2025 -26 ஆம் ஆண்டிற்கு இணையதளத்தில் (அக்.31) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். *SHARE IT
News October 11, 2025
இராம்நாடு: கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்

பாசிபட்டினம் கடற்கரை பகுதியில் ஒரு மூடை ஒன்று ஒதுங்கி உள்ளது. இது குறித்து மீனவர்கள் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் படையினர் மூட்டையை பிரித்து பார்த்ததில் 18 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். மொத்தம் ஒன்பது பொட்டலங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
News October 11, 2025
இராம்நாடு: மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்

இராம்நாடு மாவட்டத்தில் இன்று அக்.11 முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பரமக்குடி, பார்த்திபனூர், அபிராமம், கமுதி, சத்திரக்குடி, நயினார் கோவில், ராம்நாடு, திருவாடானை, மஞ்சூர், பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என ராம்நாடு காலநிலை மாற்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*ஷேர்