News December 12, 2024

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நடைத்திறப்பில் மாற்றம்

image

மார்கழி முதல் நாள் டிச.16 முதல் ஜன.13 வரை 29 நாட்கள் ராமேஸ்வரம் கோயிலில் மார்கழி மாதம் பூஜை நடக்கும். அதன்படி கோயில் நடை அதிகாலை 3:30 மணிக்கு திறக்கப்பட்டு 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கும். மார்கழி மாத உற்சவத்தில் சுவாமி புறப்பாடு நாளில் பூஜை நேரங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.

Similar News

News August 15, 2025

ராமநாதபுரம்: புது வித ஆன்லைன் மோசடி: எச்சரிக்கை

image

ராமநாதபுரத்தில் வடமாநில மோசடி கும்பல் ரூ.10,000-15,000 வரை ஒருவரது வங்கி கணக்குகளை விலைக்கு வாங்கி ஆன்லைன் மோசடியில் ஈடுபடுகின்றனர். வங்கி மேலாளர் உட்பட பலரிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளனர். லிங்க் அனுப்பி இதை டாஸ்க் செய்தால் பரிசு, அதிக வட்டி என ஏமாற்றுகின்றனர். பணம் இழந்தால் உடனடியாக 1930-ல் புகார் அளித்தால் கணக்கை முடக்கி பணத்தை மீட்கலாம் என ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் தெரிவித்தார். *ஷேர்*

News August 15, 2025

ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம்

image

ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே மின் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.சிறப்பு ரயில் ஓட்டம் நடைபெற உள்ளதால் ரயில்பாதையை யாரும் கடக்க கூடாது எனவும் 25000 மின்னழுத்த பாதையில் யாரும் நீண்ட கம்பு உலோகங்களாலான பொருட்களை அருகே கொண்டு செல்லக்கூடாது என ரயில்வே தெற்கு வாரியம் அறிவித்துள்ளது.

News August 14, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேருக்கு நீதிமன்ற காவல்

image

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள், எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (14-08-2025) மன்னார் நீதிமன்றத்தில் ஐந்தாவது முறையாக விசாரணைக்கு வந்தது. கைரேகை ஒத்துப்போகாததால், நீதிபதி 16 மீனவர்களுக்கும் ஆகஸ்ட் 29 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!