News January 13, 2025

ராமேஸ்வரம் மீனவர் 8 பேருக்கு ஜன.22 வரை சிறை

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்று நேற்று அதிகாலை கரை திரும்பிய இலங்கை கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு கடற் பகுதியில் வைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் 8 பேரை கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர் 8 பேரையும் ஜன. 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Similar News

News December 11, 2025

ராமநாதபுரம்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

ராமநாதபுரத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 11, 2025

ராமநாதபுரம்: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 11, 2025

இராமநாதபுரத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

இராமநாதபுரம், இன்று (டிச.11) ஆர்.கே நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூர், பேராவூர், தில்லை நாயகிபுரம், பழங்குளம், காவனூர் துணை மின் நிலையம், ஆனந்தூர் உப மின்நிலையம், திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதிகள், தேவிப்பட்டினம், கழனிக்குடி, சித்தார் கோட்டை, பெருவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம் & திருப்பாலைக்குடி துணை மின்நிலையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

error: Content is protected !!