News August 14, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேருக்கு ஆக. 29 வரை நீதிமன்ற காவல்

image

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள், எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (14-08-2025) மன்னார் நீதிமன்றத்தில் ஐந்தாவது முறையாக விசாரணைக்கு வந்தது. கைரேகை ஒத்துப்போகாததால், நீதிபதி 16 மீனவர்களுக்கும் ஆகஸ்ட் 29 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

Similar News

News August 14, 2025

ராமநாதபுரம் மக்களுக்கு உதவும் எண்

image

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், நகராட்சி சேவைகள் மற்றும் பணிகள் குறித்த புகார்களை 81483 30065 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து நேரடியாக தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க அவசியம் உதவும்

News August 14, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் ரூ.1.75 லட்சம் அபராதத்துடன் விடுதலை

image

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை வவுனியா சிறையில் இருந்த நிலையில், இவர்களது வழக்கு இன்று (14-08-2025) இலங்கை, மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களுக்கும் தலா ரூ.1.75 லட்சம் அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அபராதம் செலுத்தத் தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

News August 14, 2025

ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

ராமநாதபுரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், ஆகஸ்ட் 19, 2025 அன்று மாலை 4 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும், விவசாய பெருமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!