News August 5, 2025

ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் கிடந்த சடலம்

image

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பயணிகள் அமரும் நிழற்குடையில் 70 வயது மதிக்கத்தக்க பெயர் முகவரி தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த போலீசார், உடலை மீட்டு காவலர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைகு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர். மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 6, 2025

பாம்பன் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்

image

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேரையும், தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்கின்றனர்.

News August 6, 2025

ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவில் சாதனை

image

கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் 7ம் வகுப்பு மாணவி நிவேதா ஸ்ரீ, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு நேற்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாணவியை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

News August 6, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டு உள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

error: Content is protected !!