News March 26, 2025

ராமேஸ்வரம் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்வு

image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை விவாதத்தின் பதிலுரையில் அமைச்சர் கே.என் நேரு பேசினார். அப்பொழுது ராமேஸ்வரம் முதல்நிலை நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார். ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சி, 10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாக வகைப்படுத்தப்படுகின்றன. *ஷேர்

Similar News

News April 3, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர், மங்களநாயகி கும்பாபிஷேக விழா நாளை (ஏப்.04) நடைபெற உள்ளது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடுகட்டும் விதமாக மே.10ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News April 3, 2025

ஆங்கில தேர்வில் 348 பேர் ஆப்சென்ட்

image

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஆங்கிலப்பாடத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 348 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் துவங்கி ஏப்-15 வரை நடக்கிறது.16 ஆயிரத்து 399 மாணவர்கள், தனித் தேர்வர்களாக 249 பேர் என 16 ஆயிரத்து 648 பேர் தேர்வு எழுதுகின்றனர். நேற்று (ஏப்ரல்-02) நடந்த ஆங்கிலப்பாடத்தேர்வில் 348 பேர் பங்கேற்கவில்லை.

News April 3, 2025

ராமநாதபுரம் -செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

image

செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயில் சேவை மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து ஏப்.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

error: Content is protected !!