News March 18, 2025
ராமேஸ்வரம் கோவிலில் பக்தர் உயிரிழப்பு

ராமேஸ்வரம் கோயில் சுவாமி சன்னதியில் ரூ.50 கட்டண தரிசன டிக்கெட் பெற்று ஸ்படிகலிங்க தரிசனத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ்தாஸ் (59) என்பவர் நீண்ட நேரம் காத்திருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமுற்று தரையில் சாய்ந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 19, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (மார்ச்.18) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 18, 2025
பசுமை விருதுவிற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுதாரணமாக விளங்கும் நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம் www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். *உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்*
News March 18, 2025
விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப பிரார்த்தனை

விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல்வேறு தடைகள் ஏற்பட்டனஇந்நிலையில் இருவரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிட பிரார்த்தனை செய்து ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கிராம மக்கள் வேண்டுதலுடன் கூடிய பிளக்ஸ் போர்டுகள் வைத்து வரவேற்கின்றனர். இப்படி ஒரு பிளக்ஸ் போர்டு நீங்கள் பார்த்ததுண்டா? இதை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.