News August 13, 2025
ராமேஸ்வரத்தில் 5,000 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரால் மீனவர்களும் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதைக் கண்டித்து, மத்திய மாநில அரசுகளின் உரிய நடவடிக்கை கோரி, மூன்று நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு ரூ.10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதுடன், 5000 மீனவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வருமான இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News August 13, 2025
ராம்நாடு: நிலம் வாங்குறீங்களா? இதை கவனிங்க…

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
News August 13, 2025
கமுதி: லஞ்சம் பெற்ற VAO மற்றும் இடைத்தரகர் கைது

கமுதியில் நபர் ஒருவர் வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு விஏஒ பிரேமானந்த் தனக்கு நான்காயிரம் பணம் வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாயை விஏஒவிடம் கொடுக்கும் பொழுது, கையும் களவுமாக பிடிபட்டார். இடைத்தரகரும் கைது செய்யப்பட்டார்.
News August 13, 2025
ராம்நாடு: ஏமாறாமல் வெளிநாடு செல்ல வாய்ப்பு!

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெற மாவட்ட நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்களை வெளியிட்டுள்ளன. போலி ஏஜெண்டுகளால் யாரும் ஏமாறாமல் இருக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பாக நல்ல வேலைவாய்ப்புகளை பெறலாம். ஏஜென்ட்கள் விவரம் பெற <