News July 6, 2025

ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகளில் தங்கும் அறைகள்

image

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள் பயன்படுத்த உள்ளனர். இதனை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படியில் விடப்பட உள்ளது. www.ireps.gov.in இணையதளம் வாயிலாக ஜூலை 15-ம் தேதிக்கான விண்ணப்பிக்க என ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Similar News

News August 23, 2025

பரமக்குடி: கரப்பான் பூச்சி போல கவிழ்ந்த கார்

image

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து பரமக்குடிக்கு வந்து கொண்டிருந்த கார் இன்று மஞ்சுர் அருகே திருவாடி கிராம பகுதியில் திடீரென நிலை தடுமாறி வாகனம் தலைக்குப்பற அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த நான்கு இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டு சத்திரக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

News August 23, 2025

ராமநாதபுரம்: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

ராமநாதபுரம் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<> இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News August 23, 2025

ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!