News October 7, 2025

ராமேஸ்வரத்தில் டூம்ஸ்டே மீன்; சுனாமி அபாயம்.?

image

ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் நேற்று, அரிய மீன் இனமான 5 அடி நீளமுள்ள டூம்ஸ்டே மீன் சிக்கியது. ஆழ்கடலில் வாழும் இம்மீன் கடல் மேற்பரப்பில் வந்த சமயத்தில் பாம்பன் மீனவர் வலையில் சிக்கி உள்ளது. ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த மீன்கள் கரை ஒதுங்கினால் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என கூறுவதாக, மீன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Similar News

News October 7, 2025

ராம்நாடு: குறுக்கே மாடு பாய்ந்து பைக்கில் சென்றவர் பலி.!

image

திருவாடானை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் 35. இவர் பண்ணவயலிலிருந்து தொண்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அச்சங்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால், நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு ராஜேஸ்கண்ணன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 7, 2025

ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா? இத செய்யுங்க.!

image

ராமநாதபுரம் மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண், உங்க பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <>கிளிக்<<>> செய்து உங்க கேஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்க.. ரூ.300 கேஸ் மானியம் உங்க வங்கி கணக்குக்கு வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை எல்லோர்க்கும் SHARE பண்ணி உதவுங்க.!

News October 7, 2025

ராம்நாட்டில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

திருவாடானை, பெருங்குளம் மற்றும் ஏர்வாடி துணைமின் நிலையங்களில் இன்று (அக்.07) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் பெருங்குளம், உச்சிப்புளி, இருமேனி, பிரப்பன்வலசை, அரியமான் பீச், புதுமடம், வாலாந்தரவை மற்றும் பனையடியேந்தல், நல்லிருக்கை, ஆலங்குளம், மல்லல், மட்டியரேந்தல் சுற்றுவட்டாரத்தில் காலை 09:00 மணியில் இருந்து மாலை 05:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!