News January 16, 2026
ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

தை அமாவாசை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவதாக மதுரை கோட்டம், தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் அதிகாலை 3 மணிக்கு வந்துவிடும். உடனே ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5:50 மணிக்கு மதுரைக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
அதிமுகவில் இணைந்தார் தர்மர்.MP

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளராக உள்ள, மாநிலங்களவை உறுப்பினர். ஆர். தர்மர், அதில் இருந்து விலகி அஇஅதிமுகவில் இணைந்தார். இன்று (ஜன, 24) மாலை முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். உடன் ஆதரவாளர்கள் இருந்தனர்.
News January 24, 2026
இராம்நாடு: எம்.பி தர்மர் வகித்த பதவிகள்

முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஆர்.தர்மர், 1987-ல் அதிமுகவில் இணைந்து
1990 – 1995 புளியங்குடி கிராம கிளை செயலாளர்
1996 – 2006 ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி து.செ
2006 – 2014 முதுகுளத்தூர் ஒ.செ
2014 – 2016 மா.செ
முதுகுளத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர்
20 ஆண்டுகள் ஒன்றிய யூனியன் கவுன்சிலர்
2 முறை முதுகுளத்தூர் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் மற்றும்
தற்போது ராஜ்ய சபா எம்.பியாக பதவி வகிக்கிறார்.
News January 24, 2026
ராம்நாடு: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <


