News March 28, 2025
ராமநாதபுர மாவட்ட இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (மார்ச்.28) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News March 31, 2025
ராமநாதபுரம்: ரூ.80 லட்சம் மதிப்பிலான கடல்அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தென் கடலில் இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் தலா 40 கிலோ வீதம் 5 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகளை கைப்பற்றினர். கைப்பற்றிய கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
News March 31, 2025
இராமநாதபுரம் சரக டிஐஜி பதவியேற்பு

இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் ஐபிஎஸ் மதுரை சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருநெல்வேலி சரக டிஐஜியாக பணியாற்றி வந்த மூர்த்தி ஐபிஎஸ் இராமநாதபுரம் சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மார்ச்.31) இராமநாதபுரத்தில் புதிய டிஐஜியாக பதவியேற்று கொண்டார்.
News March 31, 2025
மோடி வருகையை கண்டித்து போராட்டம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.6 அன்று திறந்து வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். இந்நிலையில் மோடி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மார்ச்.31) தெரிவித்துள்ளார்.