News January 13, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஜன.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News January 21, 2026
ராம்நாடு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

இராமநாதபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 21, 2026
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.10 கோடி பரிசு

தேசிய அளவில் நீர் மேலாண்மையில் முதலிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10கோடி வழங்கியது. இதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோனிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.இ ந்த பரிசு தொகையானது மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தபடும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
News January 21, 2026
இராமநாதபுரம் ஜன.23 மிஸ் பண்ணிடாதீங்க..

இராமநாதபுரம் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் (ஜன, 23) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ள, தகுதி வாய்ந்த நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


