News January 7, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News January 23, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News January 22, 2026
இராம்நாடு: விடைபெற தயாராகும் பாம்பன் பாலம்

பாம்பனில் ஆங்கிலேயர் அமைத்த பழைய ரயில் தூக்குபாலம் அதன் உறுதித்தன்மை இழந்ததால் ரயில்வே நிர்வாகம் அதனை அகற்ற முடிவு செய்து டெண்டர் விடப்பட்டு ரூ.2.81கோடியில் தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இன்று(ஜன.22) முதல் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பூஜையானது தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றுள்ளது.
News January 22, 2026
BREAKING ராம்நாடு: 3 நாட்களுக்கு குடிநீர் வராது

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ரயில்வே தண்டவாளம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கசிவை சரிசெய்யும் பணிக்காக வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு கீழக்கரை, திருப்புல்லாணி ஒன்றியம், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் அலுவலர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க


