News August 18, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஆகஸ்ட்.17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News March 4, 2026
முதுகுளத்தூர்: தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச்.03) இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், முதுவை பாரூக் விருப்பமனுவை வழங்கினர்.
News March 4, 2026
இராமநாதபுரம்: தெரு நாய்கள் கடித்து பலியான 20 உயிர்கள்

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தூா்பாண்டி. விவசாயியான இவா் தனது சொந்த ஊரில் 120 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். அவ்வாறு வளர்க்கப்பட்ட செம்மறி ஆடுகளை நேற்று (மார்ச்.03) தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. தெருநாய்கள் கடித்து இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
News March 4, 2026
இராம்நாடு மக்களுக்கு அரசு சார்பில் அருமையான வேலை!

ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக மாவட்ட வனத்துறையின் சார்பில் பயணிகள் பேருந்து இயக்கம், விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக (தற்காலிக பணி) மாதம் ரூ.18,500 சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் ராமநாதபுரம் வன உயிரின கோட்டம் அலுவலகத்தை அணுக வேண்டும். (இராமேஸ்வரம் தீவு பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை) *SHARE


