News August 10, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இன்று (ஆகஸ்ட் 10) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News August 10, 2025

பாம்பன் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த எம்எல்ஏ

image

பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை கள் சிறை பிடிக்கப்பட்ட இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரை இன்று (ஆகஸ்ட் 10) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சந்தித்தார். அப்போது, முதல்வரிடம் கொண்டு சென்று, விடுதலை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

News August 10, 2025

ராமநாதபுரத்தில் சுய வேலைவாய்ப்புக்கு பயிற்சி

image

இந்த சுய வேலைவாய்ப்பு பயிற்சியானது தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மூலம் வழங்கப்படுகிறது. 7 நாட்கள் பயிற்சி வகுப்பு. கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை சார்ந்த சுற்றுலா மேம்படுத்தப்பட்டு வரும் சூழலில், இந்த பயிற்சி உதவியாக அமையும். இதன்மூலம், படகு ஓட்டுநர் உரிமத்திற்கு தகுதி பெறலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். *SHARE* பண்ணுங்க.

News August 10, 2025

நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

image

தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் 13 ஆம் தேதி அன்று தங்கச்சி மடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் 19ஆம் தேதி அன்று ரயில் மறியல் நடைபெறும் என்றும் அறிவிப்பு செய்துள்ளனர்.

error: Content is protected !!