News April 15, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல். 15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News April 15, 2025
ஏப்.24 ல் மதுரை ரயில்வே கோட்ட எம்பிக்கள் ஆலோசனை கூட்டம்

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம், மதுரை ரயில்வே காலனி வைகை ஆபிஸர்ஸ் கிளப்பில் ஏப்.24 காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிகள் ரயில்வே தொடர்பான வளர்ச்சி நடவடிக்கைள், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
News April 15, 2025
பவளப்பாறைகளின் சொர்க்கம்

பிச்சை மூப்பன் வலசை என்பது ராமநாதபுரம், ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கடற்கரை கிராமம். இது மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சூழல் சுற்றுலாவுக்கு ஒரு முக்கிய இடமாக விளங்குகிறது.
இங்கு மணல் திட்டுகள், பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் தாவரங்கள் என பல இயற்கை அழகுகளைக் கொண்டிருக்கிறது. (விடுமுறையை கழிக்க ரூ.200 செலவில் நீங்கள் இந்த இடத்திற்கு செல்லலாம்) *ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
மீனவர்களுக்கான இன்றைய (ஏப்.15) வானிலை அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.15) காற்றின் வேகம் 04 கிலோமீட்டர்/மணி முதல் 11 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.