News March 23, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார்ச்.22) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News April 7, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.06) பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 24.02 மில்லி மீட்டர், இராமேஸ்வரத்தில் 20 மில்லி மீட்டர், மண்டபத்தில் 17.02 தங்கச்சிமடத்தில் 10.04 மில்லி மீட்டர், முதுகுளத்தூரில் 2 மில்லி மீட்டர், கமுதியில் 02.08 மில்லி மீட்டர், பரமக்குடி 02.04 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. *ஷேர்

News April 7, 2025

தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்

image

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகமும் அமைய உள்ளது என முதல்வர் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.60 கோடியில் பாம்பன் பகுதியிலும், ரூ.150 கோடியில் குந்துகால் பகுதியிலும் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உங்க ஊர் திட்டத்தை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 7, 2025

ராமநாதபுர இளைஞர்களுக்கு வேலை ரெடி

image

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட விற்பனை பிரிவு நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து இந்த மாதம் 16-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!