News January 20, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஜன.19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News January 26, 2026
ராமேஸ்வரம்: நடுக்கடலில் சூறாவளியால் மூழ்கிய படகு!

ராமேஸ்வரத்தில் இருந்து ஜன. 24 அன்று விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இலங்கை கடல் எல்லையில் அன்றிரவு திடீரென சூறாவளி வீசி, கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் கிருபாகரன் படகில் நீர் புகுந்து மூழ்கத் துவங்கியது. படகில் இருந்த கிருபாகரன், அந்தோனி, அசோக், செல்வம், தீன் உள்ளிட்ட 6 பேர் வயர்லெஸ் கருவி மூலம் உதவி கேட்டனர். விரைந்து மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் அவர்களை மீட்டனர்.
News January 25, 2026
ராமநாதபுரம்: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

ராமநாதபுரம் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 25, 2026
ராமநாத சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் தெப்பத்தில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதனால் வருற பிப்ரவரி 1ஆம் தேதி அன்று தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் அன்று பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


