News December 14, 2024

ராமநாதபுரம்: 999 வழக்குகளுக்கு ரூ.7.80 கோடி தீர்வு தொகை

image

ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெஹ்பூப் அலிகான் தலைமை வகித்தார். நீதிபதிகள் கவிதா, மோகன்ராம், அகிலா தேவி, பிரசாத், நிலவேஸ்வரன், பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா வழக்கறிஞர் சங்க தலைவர் ஷேக் இப்ராஹிம் பங்கேற்றனர் . 3,468 வழக்குகள் பரிசீலினைக்கு எடுக்கப்பட்டு தீர்வு கண்ட 999 வழக்குகளுக்கு ரூ.7,80,30,350 நிவாரண தொகை வழங்கப்பட்டது.

Similar News

News August 22, 2025

ராம்நாடு: ஆக.27ல் 3 ரயில்கள் ரத்து!

image

ராமநாதபுரம் – சத்திரக்குடி இடையே ஆக.27ல் ரயில்வே பொறியியல் பிரிவு சார்பில் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில் (வ.எண் : 56714), திருச்சி – ராமேஸ்வரம் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்கள்:16849/16850), மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை உங்கள் நண்பர்கள்&உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News August 22, 2025

ராம்நாட்டில் சிதைந்து கிடந்த ஆண் உடலால் பரபரப்பு!

image

ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

News August 21, 2025

சக்கரகோட்டை அருகே ரயிலில் அடிபட்டி ஒருவர் உயிரிழப்பு

image

இன்று காலை சுமார் 7 மணிக்கு முன்பாக உச்சப்புளி ரயில் நிலையத்திற்கும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சர்க்கரை கோட்டை ரயில்வே கேட்டு அருகே மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவில் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் ராமேஸ்வரம் மதுரை பயணிகள் ரயில் வண்டியில் அடிபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

error: Content is protected !!