News August 8, 2025
ராமநாதபுரம்: 1000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இரட்டைஊரணி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 36 பண்டல்களில் 1000 கிலோ பீடி இலைகளை டிராக்டரில் கொண்டு வந்தனர். உச்சிப்புளி காவல்துறையினர் கடத்தல்காரர்களை மடக்க முயன்றபோது, டிராக்டர் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் வருண்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
ராம்நாடு விவசாயிகள் மானியம் பெற ஆட்சியர் அழைப்பு

2025-26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.
News August 8, 2025
ராமநாதபுரம்: கிராமங்களில் அரசு உதவியாளர் வேலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி -3, கடலாடி-6, கீழக்கரை-2, முதுகளத்தூர்- 4, திருவாடானை-1, பரமக்குடி- 3, ராமேஸ்வரம் -1 , ராஜசிங்கமங்களம்- 9 ஆகிய தாலுகாவில் உள்ள 29 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்கள், விண்ணப்பங்களை இங்கே<
News August 8, 2025
பாம்பன் பகுதி மீனவர்களுக்கு 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்ட ஒரு படகையும் அதிலிருந்து பத்து மீனவர்களையும் இலங்கை நீர்கொழும்பு அருகே உள்ள வெளிச்சரா நீதிமன்றத்தில் இலங்கை கடற்படையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, வழக்கு விசாரித்த நீதிபதி மீனவர்கள் 10 பேரையும் வரும் ஆக. 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.