News September 17, 2025
ராமநாதபுரம்: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு <
Similar News
News September 17, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் (செப், 17) பிற்பகல் 1 மணி முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கும். மாவட்டத்தில் குறிப்பாக இராமநாதபுரம் முதுகுளத்தூர், பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, அபிராமம் ,மஞ்சூர் ,மீசல் ,கடலாடி, திருவாடானை, பாண்டியூர், தூவல், சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. வெளியில் சென்றுள்ள நன்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News September 17, 2025
ராமநதபுரம்: மின்சாரம் தாக்கி பெண் பலி

தங்கச்சிமடம் விக்டோரியா நகரை சேர்ந்த மீனவர் வினோ என்பவரின் மனைவி பிரதிஷ்டா (30). இவர் நேற்று (செப் 16) மாலை வீட்டில் குளிக்கச் சென்ற போது மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது சுவிட்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரிக்கிறார். பிரதிஷ்டா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
News September 17, 2025
சாயல்குடி, பெருநாழி பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

சாயல்குடி துணை மின் நிலையம், பெருநாழி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (செப். 17) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 33 கே.வி. மின் பாதையில் பாலிமர் இன்சுலேட்டர் மாற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.