News September 15, 2025
ராமநாதபுரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். மாத விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் செப். 19 காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
ராமநாதபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் அதிகாரிகள்

இன்று (செப்டம்பர்.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
News September 16, 2025
30 அரசு பள்ளிகளுக்கு மென் திறன் டிவி வழங்கல்

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் தனியார் அறக்கட்டளை மூலம் கல்வி 40 தீர்வு செயல்பட உள்ளது. இதன் தொடக்க விழா ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் தெரிவு செய்யப்பட்ட மண்டபம் வட்டாரம் சின்னப் பாலம் நடுநிலைப் பள்ளி உள்பட 30 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு மென்திறன் டிவி வழங்கப்பட்டது. இதன் மூலம் 3, 4, 5 வகுப்புகளுக்கு ஆங்கிலம் பேச்சுப்பயிற்சி விரைவில் கற்றுத்தரப்பட உள்ளது.
News September 15, 2025
வண்ணாங்குண்டு தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. ஜெயசுதா MA,BED அவர்கள் டாக்டர். இராதகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றதற்கு பள்ளி ஆசிரியர் பெருமக்கள், மாணவர்கள், வண்ணாங்குண்டு கிராம பொதுமக்கள் என பலரும் பாராட்டுகளையும் , வாழ்த்துக்களையும் தலைமை ஆசிரியர் ஜெயசுதா அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்..