News January 3, 2026
ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

ராமநாதபுரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 30, 2026
இராம்நாடு: விடுமுறை அறிவித்த கலெக்டர்

வருகின்ற பிப்.1ம் தேதி வடலூர் இராமலிங்க அடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் இராமநாதபுரத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், அனைத்து எப்.எல்., 2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபான கடைகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் காலோன் தெரிவித்துள்ளார். இதனை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
இராம்நாடு: சூறாவளிக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

பிப்ரவரி 1 – 4 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, தமிழக கடலோரப் பகுதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளான இராமநாதபுரம் மற்றும் குமரிக்கடலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜனவரி 30, 31) மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
News January 29, 2026
பாம்பனில் தலைகுப்புற கவிழ்ந்த கிரேன்

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள பழைய இரும்பு தூக்கு பாலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் பாரம் தாங்காமல் தலைகுப்புற கவிழ்த்து. நூற்றாண்டு பழைமையான பாம்பன் இரும்பு தூக்கு பலத்தை அகற்ற பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் முதல் நாளிலே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.


