News April 17, 2024

ராமநாதபுரம்: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா

image

ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியதில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த ரூ. 12ஆயிரத்து 500 பணம், 16 வாக்காளர் அடையாள அட்டைகள் ஜஹாங்கீர் என்பவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 2, 2026

ராம்நாடு: போஸ்ட் ஆபிஸில் 2019 காலியிடங்கள்., NO EXAM

image

ராம்நாடு மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 2, 2026

ராம்நாடு: கஞ்சா பதுக்கிய அண்ணன், தம்பி கைது!

image

உப்புளி அருகே மரவெட்டி வலசை கிராமத்தை சேர்ந்த அண்ணன் – தம்பி வினோத் (33), தினேஷ் (30). இவர்கள் அப்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உச்சிப்புளி போலீசார் அவர்கள் வீட்டில் சோதனையிட்ட போது, பதுக்கி வைத்திருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத், தினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

News February 2, 2026

ராம்நாடு: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

image

ராம்நாடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

error: Content is protected !!