News April 15, 2025
ராமநாதபுரம்: வதந்திகளை நம்ப வேண்டாம் – முன்னாள் அமைச்சர்

ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து விலகுவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும் எம்ஜிஆரின் தீவிர விசுவாசியான இவர் அவரின் பிறப்பு,இறப்பு தினங்களில் சுவரொட்டி ஒட்டி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Similar News
News February 5, 2026
ராம்நாடு : உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

இராமநாதபுரம் மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..
News February 5, 2026
ராம்நாடு: ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம், செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து நேற்று செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது.
News February 5, 2026
இராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி..!

இராமநாதபுரம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் சபினா பேசும் ராஜ்கபூர், ஒன்றிய செயலாளர் காளிமுத்து, நகரச் செயலாளர் ரோஜா முருகேசன், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் ராஜ்குமார், ஐடி விங் ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.


