News February 8, 2026
ராமநாதபுரம்: ரூ.15,000 கோடி கடன் வழங்க இலக்கு

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் 2026 – 27 ஆம் ஆண்டின் முன்னுரிமை துறைகளுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை ஆட்சியர் வெளியிட்டார். அதன்படி நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.1,351 கோடி, பிற முன்னுரிமை துறைகளுக்கு ரூ.1,771 கோடி, வேளாண்மைக்கு ரூ.12,200 கோடி கடன் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
ராமேஸ்வரம் கோவில் நடை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப் 6ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. திருவிழாவின் 3-ம் திருநாளான இன்று பிப்-10 ம் தேதி சுவாமி அம்பாள் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆதலால், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 9, 2026
இராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.09) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.