News August 5, 2024
ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
இராம்நாடு: விடைபெற தயாராகும் பாம்பன் பாலம்

பாம்பனில் ஆங்கிலேயர் அமைத்த பழைய ரயில் தூக்குபாலம் அதன் உறுதித்தன்மை இழந்ததால் ரயில்வே நிர்வாகம் அதனை அகற்ற முடிவு செய்து டெண்டர் விடப்பட்டு ரூ.2.81கோடியில் தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இன்று(ஜன.22) முதல் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பூஜையானது தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றுள்ளது.
News January 22, 2026
BREAKING ராம்நாடு: 3 நாட்களுக்கு குடிநீர் வராது

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ரயில்வே தண்டவாளம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கசிவை சரிசெய்யும் பணிக்காக வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு கீழக்கரை, திருப்புல்லாணி ஒன்றியம், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் அலுவலர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
பரமக்குடி காவலருக்கு சர்வதேச சாதனையாளர் விருது

ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் என்பவர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச சாதனையாளர் உலக சாதனை புத்தகம் என்ற அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சிறந்த பொது சேவை புரிந்தமைக்காக, சிறப்பு சேவை சுற்றுச்சூழல் பணிப்பெண் விருது வழங்கி பாராட்டினர்.


