News October 28, 2025

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News October 27, 2025

மண்டபம்: வாகனம் மோதியதில் பக்தர் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இன்று (அக்.27) அதிகாலை 4:30 மணியளவில் இராமேஸ்வரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

News October 27, 2025

ராம்நாடு: 12th முடித்தால் அரசு பள்ளியில் வேலை., நாளை கடைசி

image

ராம்நாடு மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. நாளை கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 27, 2025

ராம்நாடு: இனி லைன்மேன் தேடி அலைய வேண்டாம்!

image

ராம்நாடு மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!