News April 12, 2025
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து விவர பட்டியல்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்ரல்.12) நண்பகல் 10மணி முதல் மாலை 4 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100 (அ) 100ஐ அணுகவும்
Similar News
News April 13, 2025
ராமேசுவரம் கடலில் மிதந்த இளைஞா் உடல் மீட்பு

ராமேசுவரம் மீனவா்கள் சனிக்கிழமை காலை மீன்பிடிக்க புறப்பட்டனா். அப்போது, அந்தோணியாா் ஆலயம் எதிரே கரையோரம் கடலில் ஆண் உடல் மிதந்தது. இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சென்று இளைஞரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா்.இறந்தவருக்கு 30 வயது இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா் எப்படி இறந்தாா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.
News April 12, 2025
ராமநாதபுரத்தில் 187 சமையல் உதவியாளர் பணி

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
News April 12, 2025
டூவீலரில் சேலை சிக்கிபெண் பலி

ராமநாதபுரம், R.S மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவருடன் நேற்று காலை ஊரிலிருந்து டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தெரிந்த பெண்களுக்கு SHARE செய்து பைக்கில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருங்க சொல்லுங்க.