News November 9, 2024
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர காவலர்கள் பணி அட்டவணை

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை சீனிவாசன் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News December 8, 2025
முதலமைச்சரிடம் ராமநாதபுரம் கலெக்டர் வாழ்த்து

ஒன்றிய அரசின் தேசிய நீர் விருது, நீர் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பு விருதுகளை ராமநாதபுரம் பெற்றது. இதை தொடர்ந்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இவ்விருதை மதுரையில் நேற்று (டிச.7) காண்பித்து வாழ்த்து பெற்றார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யாஷீநிகம், உடன் உள்ளார்.
News December 8, 2025
ராம்நாடு:ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

ராம்நாடு மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..
News December 8, 2025
ராமநாதபுரம்: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

ராமநாதபுரம் மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். கால் செய்து புகாரளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.


