News November 21, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வங்கக்கடலில் நாளை (நவ. 22) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற உள்ளதால் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ. 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கால பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 21, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி

image

வங்க கடலில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடிக்க வேண்டும். மீனவர் அடையாள அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

ராமநாதபுரம்: 5,810 காலியிடங்கள்.. கடைசி வாய்ப்பு! APPLY

image

ராமநாதபுரம் மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 21, 2025

மண்டபம் அருகே சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

image

மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும், இலங்கை மன்னாரை சேர்ந்த கவிராஜ், 27; மலைச்செல்வம், 35; மணிகண்டன், 32, ஆகியோர் நேற்று முன் தினம் அப்பகுதியில் மது அருந்தினர்.அப்போது,ஏற்பட்ட தகராறில் மலைச்செல்வம், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து கவிராஜை தாக்கி தப்பினார். காயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார்.

error: Content is protected !!