News April 8, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

இன்று (ஏப்ரல்.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News April 17, 2025

இராமேஸ்வரம் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து

image

இராமேஸ்வரம், திருச்செந்தூர், திருவரங்கம் உள்ளிட்ட பத்து திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு தரிசன‌ கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும், அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் சமயபுரம், இராமேஸ்வரம், திருவரங்கம், வேளச்சேரி உள்ளிட்ட 4 கோவில்களில் அர்ச்சகர் (ம) பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

News April 17, 2025

ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ்

image

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை, இராமநாதபுரம் மாவட்ட ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த 30 ஊர் காவல்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ,IPS., இன்று (17-04-25) காலை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஊர் காவல்படை காவலர்கள் மகிழ்ச்சியுடன் சான்றிதழை பெற்றனர்.

News April 17, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய உதவி எண்கள்

image

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, ஆட்சியர் அலுவலகம் – 04567-230056,57,58, தீ தடுப்பு, பாதுகாப்பு-101, விபத்து அவசர வாகன உதவி – 102
மருத்துவ உதவி – 104, குழந்தைகள் பாதுகாப்பு – 1098
பேரிடர் கால உதவி – 1077, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993 ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம்.*ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!