News August 8, 2024
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 9, 2025
ராமநாதபுரம் வழுதூரில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரம், வழுதூர் பகுதியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதமன் வீட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊர் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் கோவிந்தனின் மகன் பிரபு பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேணிக்கரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 9, 2025
ராமநாதபுரம்: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி.?

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த் துறையில் 29 காலிப் பணியிடங்கள் உள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சைக்கிள்/பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பதாரர் அதே தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தமிழில் எழுத/ படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும்.
மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை
இந்த லிங்கில் விண்ணப்பம் <
News August 9, 2025
ராமநாதபுரம் மக்களே..! நூதன மோசடி; உஷார்

இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெயரால் ஸ்காலர்ஷிப் என்று சொல்லி, QR code, வங்கி கணக்கு, OTP கேட்டு பணம் மோசடி செய்பவர்கள் மீது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.