News August 16, 2025
ராமநாதபுரம்: மத்திய அரசு வேலை! தேர்வு கிடையாது..

ராமநாதபுரம், மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே<
Similar News
News August 16, 2025
தேவிபட்டினம் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கழனிக்குடியில் இருந்து இன்று பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட செல்வி(23) என்ற பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸில் இருந்த அவசர கால உதவியாளர் பழனி, அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. டிரைவர் கார்த்திக் துரிதமாக செயல்பட்டு, தேவிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.
News August 16, 2025
ராமநாதபுரம்: உறவினர் வீட்டில் நகை திருடிய பெண் கைது

அபிராமம் அருகே கோனேரியேந்தல் கிராமத்தில் முனியசாமி வீட்டில் 14 பவுன் நகை ஆகஸ்ட் 8 அன்று திருட்டுபோனது. அபிராமம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, விரல் ரேகை பரிசோதனை மேற்கொண்டனர். விசாரணையில், முனியசாமியின் உறவினர் வித்யாவின் விரல் ரேகை பொருந்தியது. இதையடுத்து, வித்யாவை கைது செய்த காவல்துறையினர், திருடப்பட்ட 14 பவுன் நகையை மீட்டனர்.
News August 16, 2025
ஆறாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் தொடர்ந்து ஆறாவது நாளாக (16-08-2025) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மீன்பிடி படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டு, மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன்காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.