News September 14, 2025
ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் செல்வபெருந்தகை !

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டு குறித்து விளக்க பொதுக்கூட்டம் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோ தலைமையில் நடந்தது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலர் பங்கேற்றனர். ராஜாராம் பாண்டியன், தெய்வேந்திரன், செல்லத்துரை அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 14, 2025
பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளராக ராமநாதன்

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக மாநில மீனவர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமநாதன் என்பவருக்கு பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை பாஜக மாநில மீனவர் பிரிவு அமைப்பாளர் சீமா இன்று (செப்.13) அறிவித்துள்ளார்.
News September 13, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (செப்.13) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என்று காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News September 13, 2025
ராமநாதபுரம் மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <