News April 27, 2024
ராமநாதபுரம்; புல்லட் மோதியதில் பெண் படுகாயம்!

ராமநாதபுரம் மாவட்டம் முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி மனைவி மலர்விழி(59), தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று மாலை காருகுடி பஸ் ஸ்டாப்பில் சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியில் வந்த புல்லட் பைக் பலமாக மோதியதில் படுகாயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் காந்தி புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News March 4, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

இன்று (மார்.03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 3, 2026
ராம்நாடு: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

இராமநாதபுரம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
ராம்நாடு : டிப்ளமோ முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: CLICK HERE.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.!


