News April 14, 2024
ராமநாதபுரம்: நீத்தார் நினைவு தினம்

ராமநாதபுரம் தீயணைப்பு படை அலுவலகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 14) தீயணைப்பு படை அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் வீரச்செயல் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் அப்பாஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
Similar News
News November 16, 2025
இராமநாதபுரம் அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

2024-25 சிறந்த பள்ளிக்கான கேடயம் வழங்கும் நிகழ்வு காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக கேடயங்களை வழங்கினர். அதில் இராமநாதபுரம் பேராவூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான கேடயத்தை தலைமை ஆசிரியை காளீஸ்வரி பெற்றுக்கொண்டார்.
News November 16, 2025
ராமநாதபுரம்; டெட் தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு!

இராமநாதபுரம் அருகே உள்ள முகமது சதக் கல்லூரியில் இன்று (15.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் டெட் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
News November 16, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


