News April 19, 2024
ராமநாதபுரம்: நவாஸ் கனி எம்பி வாக்களிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி என 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,934 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, கடலாடி ஊராட்சி ஒன்றிய குருவாடி துவக்கப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
Similar News
News August 18, 2025
ராமநாதபுரம்: காவல் துறை அவசர உதவி எண்கள்

இன்று (ஆகஸ்ட்.18) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News August 18, 2025
ராம்நாடு விவசாயிகளே உங்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் ஆக 22. காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். இதில் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
கீழத்தூவல் கிராமத்தில் முதலாமாண்டு வடமாடு மஞ்சுவிரட்டு

முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழத்தூவல் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி மாபெரும் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க இருக்கின்றன.