News March 19, 2024

ராமநாதபுரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

இராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (37). இவர் 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி அவரது பெற்றோரிடம் நடந்ததை சொல்லியுள்ளார். இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சுதாகரை தேடிவருகின்றனர்.

Similar News

News April 2, 2025

நினைத்தை நிறைவேற்றும் நவபாஷாண நவக்கிரக கோயில்

image

கடலுக்குள் இருக்கும் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகங்கள் உள்ள தலத்தில் நீராடினால் மிகவும் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், களத்திர தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், பிதுர் தோஷம், ஆயுள் தோஷம், நட்சத்திர தோஷம், சனி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளிட்டவை நீங்கி நினைத்தது நிறைவேறும். இதை SHARE பண்ணுங்க.

News April 2, 2025

ராமநாதபுரத்தில் வேலை வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 விற்பனையாளர் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குஇ 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 15க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்.

News April 2, 2025

ரயிலில் 20 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர்

image

சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டியில் திருச்சி-மண்டபம் வரை பயணித்த பயணிகளின் உடைமைகளை போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனை செய்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதேஷ் மொகாந்தி 28, பிரியா பாரத் மொகாந்தி 40 ஆகியோரின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்பொழுது இருவரிடமும் 19.700 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இருவரையும் போதைப் பொருள் தடுப்பு போலீசில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!