News November 23, 2025
ராமநாதபுரம்: சமையல்காரர் அடித்து கொலை

பாம்பன் அன்னை நகரை சேர்ந்தவர் அன்சாரி, 65; சமையல்காரர். இவரது வீட்டருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் ‘குடி’மகன்கள் போதையில் அன்சாரி வீட்டருகே மது அருந்திவிட்டு, அங்கேயே காலி பாட்டிலை வீசி உள்ளனர். அன்சாரி, அவர்களை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே அங்கு வந்த போதை ஆசாமிகள் சிலர், அன்சாரியை கட்டையால் அடித்து கொலை செய்தனர். போலீசார், கொலையாளிகளை தேடுகின்றனர்.
Similar News
News January 27, 2026
ராமநாதபுரம்: உடலை வாங்க மறுத்து போராட்டம்

வைரவனேந்தல் அருகே காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(35). நேற்று முன்தினம் இவர் உறவினர் வீட்டிற்கு சென்று அதிகாலை 12.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது குளத்தூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகன மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதியும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
News January 27, 2026
ராம்நாடு: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News January 27, 2026
ராம்நாடு: மருத்துவமனையில் ஊசி போட்டவர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், அருங்குளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பில்லத்தியான் (45), பரமக்குடி தனியார் மருத்துவமனையில் ஊசி செலுத்திய சில நிமிடங்களில் மயங்கி உள்ளார். பரமக்குடி அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்று தனியார் மருத்துவமனை ஊசி செலுத்தியதே காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எமனேசுவரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை.


