News July 7, 2025

ராமநாதபுரம்: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

image

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்,ராமநாதபுரத்திற்கு 29 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974346>>மேலும் அறிய<<>>

Similar News

News July 8, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு காவலர்களின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News July 7, 2025

ராமநாதபுரம் : கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

image

▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.

▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

▶️ விவரங்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

News July 7, 2025

ராமநாதபுரம்: கஞ்சா கடத்தல்: 15 நாட்களில் 268 கிலோ பறிமுதல்

image

ராமநாதபுரம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. 15 நாட்களில் 268 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திரா, ஒடிசா, தேனி மலைப்பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. ஜூன் 22ல் முள்ளிமுனையில் 90 கிலோ, புதுக்கோட்டையில் 100 கிலோ, தீர்த்தாண்டதானத்தில் 78 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

error: Content is protected !!