News March 16, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News March 16, 2025

அண்ணனும் தம்பியும் ஒரே கருவறையில்

image

ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் விநாயகரும் முருகனும் இணைந்து ஒரே கருவறையில் காட்சியளிக்கின்றனர். தெய்வங்கள் இருவரையும் ஒரே சந்நிதியில் தரிசிப்பது பெரும் வரம். சொத்துவழக்குப் பிரச்னைகள், குடும்பச் சிக்கல்கள், உறவு பிரச்னைகள், சகோதர, சகோதரிகளிடையே உருவாகும் சண்டைகள் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர். சனீஸ்வரரின் அன்னை சாயாவின் அம்சம் நிறைந்த தலவிருட்சம் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.

News March 16, 2025

வழிவிடு முருகன் கோவில் 85 ஆம் ஆண்டு உத்திர பெருவிழா

image

இராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோவில் 85 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழா
11/04/25 வெள்ளிகிழமை பங்குனி வழிவிடு முருகனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அன்று இரவு 7 மணிக்கு மேல் பூக்குழி வைபவம் நடைபெறும். 12.04.25 சனிக்கிழமை அன்று வழிவிடு முருகன் திருவீதி உலா நடைபெறும். *ஷேர்

News March 16, 2025

சாலை விபத்தில் 22 பேர் காயம்; ஒருவர் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து நேற்று மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து ரிங் ரோடு அருகில் லாரி, வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிவகங்கையை சேர்ந்த ஸ்டெல்லா செல்வி(58), என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 22 பயணிகள் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (மதுரை) சிலைமான் போலீசார் விசாரணை.

error: Content is protected !!