News March 26, 2026

ராமநாதபுரம்: கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட வாலிபர்கள்

image

ராமநாதபுரம் தங்கப்பாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்(19). இவரும், ராமநாதபுரம் அய்யப்பன்கோவில் தெருவைச் சேர்ந்த பிரசன்னா(20) என்பவரும் இன்ஸ்டாகிராமில் சிறிய கத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் அச்சுறுத்தம் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டறிந்த போலீசார் ஹரிஷ் மற்றும் பிரசன்னா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News April 7, 2026

இராம்நாடு: நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து.!

image

தொண்டி மகாசக்திபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சக்தி பாண்டி (37), உத்தமராஜன் (19). இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், திடீரென கடலில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் மீனவர்கள் சக்தி பாண்டி, உத்தம ராஜன் சென்ற படகு காற்றின் வேகத்தில் கவிழ்ந்தது. நடுக்கடலில் தத்தளித்த 2 மீனவர்களையும் அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து தங்கள் படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.

News April 6, 2026

ராம்நாடு: டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை பயன்படுத்தி வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகவும் . SHARE IT

News April 6, 2026

ராம்நாடு: இந்த கார்டு இருந்தால் மருத்துவம் இலவசம்

image

ராமநாதபுரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள்.SHARE IT

error: Content is protected !!