News June 25, 2024
ராமநாதபுரம் எம்.பி யாக நவாஸ்கனி பதவியேற்பு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ்கனி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நவாஸ்கனி,
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News September 17, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் (செப், 17) பிற்பகல் 1 மணி முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கும். மாவட்டத்தில் குறிப்பாக இராமநாதபுரம் முதுகுளத்தூர், பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, அபிராமம் ,மஞ்சூர் ,மீசல் ,கடலாடி, திருவாடானை, பாண்டியூர், தூவல், சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. வெளியில் சென்றுள்ள நன்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News September 17, 2025
ராமநாதபுரம்: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு <
News September 17, 2025
ராமநதபுரம்: மின்சாரம் தாக்கி பெண் பலி

தங்கச்சிமடம் விக்டோரியா நகரை சேர்ந்த மீனவர் வினோ என்பவரின் மனைவி பிரதிஷ்டா (30). இவர் நேற்று (செப் 16) மாலை வீட்டில் குளிக்கச் சென்ற போது மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது சுவிட்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரிக்கிறார். பிரதிஷ்டா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.