News December 27, 2025
ராமநாதபுரம்: இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

ராமநாதபுரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
Similar News
News December 28, 2025
ராமநாதபுரம்: கேஸ் சிலிண்டர் இருக்கா… இது ரொம்ப முக்கியம்

மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News December 28, 2025
ராம்நாட்டில அதிர்ச்சி…. ஒரே ஆண்டில் 686 பேர் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் புதர்மண்டி காணப்படுவதால் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களை பாம்புகள் தாக்குகின்றன.பாம்பு கடியால் பாதிக்கப்படுவோர் அதிகரிக்கும் நிலையில் 2025ல் ஓராண்டில் 686 பேர் பாம்புகடியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது.
News December 28, 2025
இராமநாதபுரம்: இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


