News November 12, 2024
ராமநாதபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

இன்று (நவ.12) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை சுதீர்லால் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News August 5, 2025
ராமநாதபுரம்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் அரசு நிலத்தில் வசிப்போர் (அ) நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் (அ) வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News August 4, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
News August 4, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தற்போது விநாடிக்கு ஆயிரத்து 594 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் 69 அடியை எட்டிவிடும். இந்நிலையில் 3ஆம் கட்ட அபாய எச்சரிக்கைக்குப் பிறகு எந்நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட வைகை கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.