News August 16, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
Similar News
News August 17, 2025
இந்தியாவிலேயே இராமநாதபுரத்தில் மட்டும் தான்.!

இராமநாதபுரம் தேவிபட்டினத்தில் அமைந்துள்ளது நவபாஷாண நவக்கிரகக் கோயில். இந்தியாவில் கடலுக்குள் அமைந்திருக்கும் ஒரே நவபாஷாண கோயில் இது தான். இராமன், இராவணனுடன் போரிடுவதற்கு முன், இந்த நவக்கிரகங்களை வழிபட்டதாகவும், நவபாஷாணங்களை கொண்டு நவக்கிரகங்களை நிறுவியதாகவும் நம்பப்படுகிறது. இங்கு வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். Share.
News August 17, 2025
இராமநாதபுரம்: டிக்கெட் ஓபன்.. ரெடியா இருங்க.!

இராமநாதபுரம் மக்களே.. தீபாவளி பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.17) துவங்குகிறது. அதன்படி, அக்.16ஆம் தேதிக்கான முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம். அக்.17ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.18ஆம் தேதிக்கான முன்பதிவை நாளை மறு நாளும் செய்து கொள்ளலாம். அதேபோல, அக்.19ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.20ஆம் தேதியும், தீபாவளி நாளான அக்.20ஆம் தேதிக்கான முன்பதிவை ஆக.21ஆம் தேதியும் செய்து கொள்ளலாம்.
News August 16, 2025
தேவிபட்டினம் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கழனிக்குடியில் இருந்து இன்று பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட செல்வி(23) என்ற பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸில் இருந்த அவசர கால உதவியாளர் பழனி, அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. டிரைவர் கார்த்திக் துரிதமாக செயல்பட்டு, தேவிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.