News December 29, 2025
ராமநாதபுரம்: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

ராமநாதபுரம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
A – 26 என்றால் மார்ச் 2026 என்று அர்த்தம். இனி உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
Similar News
News December 31, 2025
பரமக்குடி கொலை வழக்கு.. பாய்ந்த குண்டாஸ்!

பரமக்குடி சாமி செட்டியார் நந்தவனத்தை சேர்ந்த சுரேஷ் என் பவரது மகன் கார்த்திகேயன் (23) கடந்த மாதம் பரமக்குடி காய்கறி மார்க்கெட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் வினோத் (33) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் வினோத் மீது வன்கொடுமை, கொலை முயற்சி உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வினோத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News December 31, 2025
இராமநாதபுரத்திற்கு புதிய டிஐஜி நியமனம்

இராமநாதபுரம் சரக புதிய டிஐஜியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னாதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இராமநாதபுரம் சரக டிஐஜியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2012 காவல்துறை பேட்ச் அதிகாரி ஆவார்.
News December 31, 2025
இராமநாதபுரம் போலீஸ் சரக டிஐஜி டிரான்ஸ்பர்

இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த டாக்டர் பி.மூர்த்தி ஐபிஎஸ் சென்னை அமலாக்க பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு முழுக்க பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.


